அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை மீண்டும் அனுப்ப சுங்கம் நடவடிக்கை

கடந்த ஆண்டு பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை விரைவில் திருப்பி அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முடிவு செப்டம்பர் 22 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்ரிய தெரிவித்துள்ளார். 

 மொத்தம் 263 கழிவுக் கொள்கலன்கள் இலங்கைக்கு வந்தன, அவற்றில் 130 (40 அடி கொள்கலன்களில்) ஹேலீஸ் குழுமத்தால் அகற்றப்பட்டு கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டது. இதன் பின்னர் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அந்தக் கழிவுகள் 330 கொள்கலன்களில் (20 அடி கொள்கலன்களில்) மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மீதமுள்ள கொள்கலன்கள் சீனாவினால் இயங்கும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்களிலும் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
\
 அந்தவகையில் கொழும்பு துறைமுகத்திற்குள் காணப்படும் 133 கொள்கலன்களில் 21 ஐ விரைவில் திருப்பி அனுப்புவோம் என இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்ரிய குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுடன் விவாதித்து வருகின்றனர். மிக விரைவில் 21 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

 பிரித்தானிய ஏற்றுமதியாளரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சசிகுமார் முத்துராமன் மற்றும் இலங்கையில் உள்ள இறக்குமதியாளர் சசிகுமார் ஆகியோர் உடன் பிறந்தவர்கள் என்றும் ரவிப்ரியா குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாகவும் “விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் கூறினார்.



பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை மீண்டும் அனுப்ப சுங்கம் நடவடிக்கை Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.