அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்று - முழு விபரம்

இன்று காலை (30) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும் ஓமானில் இருந்து வந்த 7 பேருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3373 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் (29) தனிமைப்படுத்தப்பட்ட 297 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையம் (154),பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் (03), கொஸ்கொட செரடன் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையம் (108), ஹோட்டல் கிலப்டொல்பின் தனிமைப்படுத்தல் மையம்(30), மற்றும் ருவல கல்பிட்டிய தனிமைப்படுத்தல் மையம்(02) உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

 அதேபோல், நேற்று (29) காலை வரையான காலப் பகுதியில் 46330 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். நேற்று (29) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 6882 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 நேற்று முன்தினம் (28) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1203 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 284059ஆகும். இதற்கிடையில், குணமடைந்த 20 கொவிட்- 19 தொற்றாளர்கள் நேற்று (29) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களாகும். நேற்று (29) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்று - முழு விபரம் Reviewed by Author on September 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.