அண்மைய செய்திகள்

recent
-

இரட்டை குடியுரிமையில் மாற்றம் கொண்டுவர முடியாது! மறுத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான ஷரத்தை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை சம்பந்தமான ஷரத்தை தவிர, அவசர சட்டமூலங்களை நிறைவேற்றுவது, கணக்காய்வு சட்டமூலம் மற்றும் அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுக்கும் ஷரத்துக்களை திருத்த அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

 இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அப்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, தானும் ஒரு காலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால், 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள அந்த ஷரத்தை நீக்குவதற்கு இணங்க முடியாது எனக் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர இடர் நிலைமைகளில் மாத்திரம் அவசர சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமையில் மாற்றம் கொண்டுவர முடியாது! மறுத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச Reviewed by Author on October 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.