அண்மைய செய்திகள்

recent
-

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள்..!

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 142 பில்லியன் ரூபா செலவிலான குறித்த மத்திய அதிவேக வீதியின் இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ஆரம்ப நிகழ்வின் போது விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்ணாண்டோ உள்ளிட்;ட பல அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.

 இதேவேளை, சமய ஒழுக்கவிதிகளுக்கு அமைய வாழும் சமூகமொன்றே உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராகவிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறான கடினமான காலப்பகுதியிலேயே பக்தி, அன்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வு என்பன நாட்டிற்கு அவசியமாகிறது. மதத்தின் வழியே வாழும் சமூகமொன்றை உருவாக்குவதற்கு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு ஒருபோதும் தயங்காது. இலங்கை மாத்திரமின்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுகாதார பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

 உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை கத்தோலிக்க மக்கள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவது தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எமக்கு மதச்சார்பற்ற நாடு தேவையில்லை. அவ்வாறு மதம் வேண்டாம் என்பவர்களுக்கு கடந்த காலத்தில் சிறந்த பதில் கிடைத்தது. சமய ஒழுக்கவிதிகளுக்கு அமைய வாழும் சமூகமொன்றே எமக்கு வேண்டும். சமய விழுமியங்களுக்கு அமைய செயற்பட்டாலேயே அவ்வாறான சமூகமொன்றை உருவாக்க முடியும். 

 அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் தாம் தயாராகவிருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள்..! Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.