அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தடுப்பூசிய போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று தெரியுமா? ஐசிஎம்ஆர் தகவல்

கொரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. எவ்வளவு பேருக்கு இப்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தி: ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இது பற்றிய தரவுகளை வெளியிட்டார். 

 கோவேக்சின் தடுப்பூசி இதுவரை 1.1 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு முதல் டோசாக செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4,208 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல், 17,37,178 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் 698 (0.04%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் 10,03,02,745 (சுமார் 10 கோடி பேர்) பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் 17,145 (0.02%) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

 இரண்டாவது டோஸ் 1,57,32,754 பேர் செலுத்திக் கொண்டனர். இவர்களில் 5,014 (0.03%) பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். யாரும் கவலைப்பட தேவையில்லை" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மும்பையில் காசநோய் சிகிச்சை நிபுணர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும், அவர் இறப்பதற்கு முன் தன் முகநூலில் கடைசியாக பதிவிட்ட சில விஷயங்களையும் குறிப்பிட்டு செய்தி பிரசுரித்திருக்கிறது இந்து தமிழ் திசை. 

 மும்பை ஷிவ்ரி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மனீஷா ஜாதவ் (51) கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது முகநூல் பதிவில், தான் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் "இதுவே எனது கடைசி 'குட் மார்னிங்' ஆக இருக்கலாம்" என பதிவிட்டர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் பல்வேறு மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசிய போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று தெரியுமா? ஐசிஎம்ஆர் தகவல் Reviewed by Author on April 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.