அண்மைய செய்திகள்

recent
-

காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் கைது..!

மட்டக்களப்பு-காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (26) காத்தான்குடி-அல் அமீன் வீதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 86 கிராம் 356 மில்லிக்கிராம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 49 வயதுடையவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் கைது..! Reviewed by Author on July 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.