அண்மைய செய்திகள்

recent
-

ஊழல் குற்றசாட்டு தொடர்பாக மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விளக்கம்

மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தை ஊக்குவிப்பதே எமது இலக்கு ஊழல் செய்வது அல்ல என மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் தலைவர் ஞா. அண்ரனி டேவிட்சன் தெரிவித்தார். 

 மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விசேட கூட்டம் இன்று (31) காலை 10.30 மணி அளவில் மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

 இதன்போது இந்த கருத்தினை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,, முகநூல் ஒன்றில் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் 60 இலட்சம் ரூபாய் ஊழல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. 

 அதனை பலர் பகிர்ந்து இருந்தார்கள். இவ்வாறு ஒரு அவதூறு குற்றச்சாட்டு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மீது வருவதற்கு மன்னார் தாழ்வுபாடு விளையாட்டு மைதானத்தில் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கின்றது. 

 இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும், மன்னார் ஆயர் இல்லம் மற்றும் தாழ்வுபாடு ஆலய சபைக்கும் இடையில் உதைபந்தாட்ட மைதானம் தொடர்பான உடன் படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

 இதற்கான நிதி அனுசரணையை வழங்கியது இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனம் விளையாட்டு மைதானத்திற்கான காணியை வழங்கியது மன்னார் ஆயர் இல்லம் தாழ்வுபாடு ஆலய சபை. இந்த மைதானத்தை துப்பரவு செய்து பராமரிப்பதற்கு வேறு ஒரு நபருக்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஊதியம் வழங்கியிருந்தது. 

 இதில் எந்த ஒரு நிதி கொடுக்கள் வாங்கள்களுக்கும் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும் தொடர்பு இல்லை. மன்னார் ஆயர் இல்லம் தாழ்வுபாடு ஆலய சபை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் செய்து கொண்ட உடன்படிக்கையில் 30 ஆண்டுகாலம் சொத்து கழிவு நிறைவு பெறும் நேரத்தில் அந்த விளையாட்டு மைதானம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமாகும் .

 இதுவே அந்த உடன் படிக்கை .இதில் நிதி மூலமான செயற்பாடுகள் அங்கு நடைபெறவில்லை இதற்கும் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

 மேலும் மன்னார் மாவட்ட இளைஞர்கள் உதைபந்தாட்டத்தில் தங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை தக்க வைத்து இருக்கின்றார்கள். அவர்களுடைய விளையாட்டு திறமையை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்த சம்மேளனம் தொடர்ந்தும் போராடும்.

 எமது இலக்கு மன்னார் மாவட்டத்தில் உதை பந்தாட்டத்தை ஊக்குவிப்பதே தவிர ஊழல் செய்வது இல்லை. இதை எமது விளையாட்டு வீரர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றர்கள்.

 இதேவேளை ஒரு விடயத்தை நன்கு அறியாமல் முகநூல் வழியாக இவ்வாறான தவறான பரப்புரை செய்வது எமது சமூகத்திற்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அண்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.





ஊழல் குற்றசாட்டு தொடர்பாக மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விளக்கம் Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.