அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவை அடுத்தடுத்து தாக்கிய மூன்று பூகம்பங்கள் -

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவி;ன் வடகிழக்கிலுள்ள மான்ஸ்பீல்டை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன. கட்டிடங்கள் பலத்தசேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்பைன் தேசிய பூங்கா பகுதியில் முதலாவது பூகம்பம் உணரப்பட்டது  என தெரிவித்துள்ள அதிகாரிகள் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இது காணப்பட்டதாகவும் ஐரோப்பிய குடியேற்றத்தின் பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய கடுமையாக பூகம்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளனர். முதலாவது பூகம்பம் தாக்கி 15 நிமிடத்தின் பின்னர்இரண்டாவது பூகம்பமும் ( 4.00) அதன் பின்னர் மூன்றாவது பூகம்பமும்( 6.00) தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவிலிருந்து கவலை வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்கொட்மொறிசன் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மெல்பேர்ன் விக்டோரியா சிட்னி போன்ற பகுதிகளிலும் பூகம்பம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெல்பேர்னில்  தொடர்மாடிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அங்கு வீதிகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பூட்வேர்க்ஸ்மன்ஸ்பீல்டின் முகாமையாளர் கரென் மக்கிரகெர் நகருக்குள் கனரகவாகனம் நுழைவதாக கருதியதாக தெரிவித்துள்ளார். ஜன்னல்கள் சுவர்கள் ஆடத்தொடங்கின பொருட்கள் அனைத்தும் மேசையில் விழுந்தன உண்மையிலேயே அது அச்சமூட்டுவதாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் கீழே ஓடினோம் அங்கு மேலும் அச்சமான நிலை காணப்பட்டது,ஜன்னல்கள் கழன்று விழும் நிலையிலிருந்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நான் மிகுந்த அச்சமடைந்தேன் இந்த இடம் விழுந்து நொருங்கப்போகின்றது என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடைக்கு சேதமேற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனது இளைய மகளுடன் புசமையலில் ஈடுபட்டிருந்தவேளை பூகம்பம் தாக்கியது புத்;தக அலுமாரியை கிட்டத்தட்ட கவிழ்த்தது என மான்ஸ்பீல்டை சேர்ந்த பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார். கட்டிடம் அச்சம் தரும் விதத்தில் குலுங்கியது நான் அது விழுந்து தரைமட்டமாகப்போகின்றது,பொருட்களை பாதுகாப்பதா பிள்ளையை பாதுகாப்பதா என சிந்தித்தேன் என அவர் தெரிவித்துள்ளார். நான் மகளுடன் வீட்டிலிருந்து வெளியே ஒடத்தயாரானவேளை அடுத்த அதிர்வுகள் நிகழ்ந்தன என அவர் தெரிவித்துள்ளார். நான் எனது வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவென பெலரைன் வளைகுடாவில் வசிக்கும் 60 வயது பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார்.



அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவை அடுத்தடுத்து தாக்கிய மூன்று பூகம்பங்கள் - Reviewed by Author on September 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.