அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச சபை கவிழ்ப்பு முயற்சியும் சட்டவிரோத மண் அகழ்வும்

நான்கு வருடங்களுக்கு மேலாக தூக்கத்தில் இருந்த மன்னார் நானாட்டான் பிரதேச சபை திடீர் என கண் விழித்தது போன்று பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நானாட்டான் பிரதேச சபையில் இடம் பெற்று வருகின்றது

 வீதிகளில் நடமாடும் கட்டாகாலி மாடுகளையே கட்டுப்படுத்த முடியாமல் காணப்படும் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அண்மையில் நானாட்டான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக மன்னார் மேல் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார் காலம் கடந்த ஞானம் போன்று மரங்கள் சரிந்து விழும் அளவுக்கு மணல் தோண்டப்படும் போது கண் திறக்காத தவிசாளர் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை வெற்றி பெற வைக்க எடுத்த அதிரடி நடவடிக்கையாகவே இது கருதப்படுகின்றது 

 இது ஒரு புறம் இருக்க மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினரும் பிரபல வர்தகரும் என்னும் சொல்லில் அடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளருமான உறுப்பினர் ஒருவர் சட்ட விரோதாமா அனுமதி பத்திரத்தின் அறிவுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அகழ்ந்து வருவதுடன் அதற்கு எதிராக நீதி மன்றம் சென்ற நானாட்டன் பிரதேச சபை தவிசாளரை ஆட்சி கவிழ்ப்பு செய்ய ஆவலோடு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

 நீண்ட நாட்களுக்கு பின்னர் நானாட்டான் தவிசாளரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒரு நல்ல விடயம் இந்த சட்ட விரோத மணல் அகழ்வுக்கு எதிராக நீதி மன்றம் சென்ற விடயமே அதுகூட பொறுக்காத சக உறுப்பினர் சிலர் தன் சகாக்களுடன் இணைந்து 2022 நானாட்டான் பிரதேச சபையின் ஆண்டு பட்ஜட்டை தோற்கடித்து ஆசணத்தில் தான் அமர்ந்து இஸ்ரபடி மண் கடத்தல்களை மேற்கொள்ளாம் என ஆராய்சிகளில் ஈடுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது இதன் அடிப்படையில் நானாட்டான் பிரதேச சபை 16 உறுப்பினர்களை கொண்டது.

 இச்சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களை கொண்டு தட்டுத்தடுமாறி தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி கட்டி காத்து வருகின்றார் . இதேவேளை இச் சபையில் எதிர்கட்சி என்ற பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணி 3 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 உறுப்பினர்களையும் சுகந்திர கட்சி ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளது. கடந்த வருடம் சுகந்திரக் கட்சி உறுப்பினர் முதுமை காரணமாக இறந்தநிலையில் அவரின் உறுப்பினர் பதவிக்கு இதுவரை ஒருவரையும் நியமிக்கவில்லை. 

இவ்வேளை ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தற்பொழுது EPDP யுடன் இணைந்து செயல்படுகின்றார் இதனை அடிப்படையாக கொண்டு பாவப்பட்ட பாதீட்டை தோற்கடிப்பதற்கு எதிர்கட்சியினர் உயிரை பணையம் வைத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் மறுபக்கம் எப்படியாவது இந்த பாதீட்டை நிறைவேற்றி என்னும் சிறிது கால ஆட்சியை தக்க வைக்க தவிசாளர் பரஞ்சோதி கடலுக்கு அடியில் இருந்து ஜோசிப்பது போன்று கடுமையாக ஜோசித்து காய் நகர்தி வருகின்றார் எது எப்படியோ இந்த பாதீட்டின் பின்னராவது தூக்கத்தில் இருக்கும் நானாட்டான் பிரதேச சபை விழித்து கொள்ளுமா இல்லை வீதிகளில் உள்ள மாடுகளைகூட விரட்ட முடியாத நிலைக்கு செல்லுமா, சட்டவிரோத மணல் அகழ்வுகள் நிறுத்தப்படுமா இல்லை மனம் போன போக்கிலே மணல் போகுமா போன்ற பல்வேறு கேள்விகளோடு உங்களை போலே நாமும் , --



நானாட்டான் பிரதேச சபை கவிழ்ப்பு முயற்சியும் சட்டவிரோத மண் அகழ்வும் Reviewed by Author on October 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.