அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு கோட்டபாஜராஜபக்ஸ திடீர் விஜயம்

மன்னார் நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள   இலங்கையின் முதல் காற்றாலை மின்சக்தி பூங்காவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஸ் இன்று(02)புதன்கிழமை காலை 11 மணியளவில்  வருகை தந்துள்ளார்


மன்னார் தாழ்வுபாடு தொடக்கம் நடுக்குடா வரை நிறுவப்பட்டுள்ள பாரிய காற்றாலை காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தொடர்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்றைய தினம்(01) மதியம் இடம் பெற்ற மன்னார் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை நிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த காற்றாலை பூங்காவிற்கு கோட்டபாயராஜபக்ஸ விஜயம் மேற்கொண்டுள்ளார்

கடந்த வருடம் குறித்த நடுக்குடா காற்றாலை மின் செயற்திட்டத்தை பார்வையிடுவதற்காக இந்தியாவின் தொழில் அதிபரான அதானி வருகை தந்ததுடன் இலங்கைக்கான சீன தூதுவரும் காற்றாலை மீன் செயற்திட்டத்தை பார்வையிட்ட நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஸவும் வருகை தந்துள்ளார்

கடந்த மாதம் அளவில் காற்றாலை விரிவுபடுத்தல் திட்டத்திற்கான் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட குழுவினர் எருக்கலம் பிட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் குறித்த ஆய்வு நிறுத்தப்பட்டது

அதே நேரம் தற்போது தாழ்வுபாடு தொடக்கம் செளத்பார் கடற்கரை வரை காற்றாடிகளை பொருத்துவதற்கான விரிவுபடுத்தல் திட்டம் உயர் மட்ட ரீதியில் இடம் பெறுவதாகவும் நேற்றைய தினம் இடம் பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே  அவற்றை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது 

இவ்வாறான பின்னனியில் ஜனாதிபதியின் மன்னார் விஜயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த திங்கட்கிழமை காற்றாலை மின் திட்டம் மற்றும் கணியமணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் மேற்கொண்டமை குறிப்பிடதக்கது



02-02-2022

மன்னார் நகர் நிருபர்

மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு கோட்டபாஜராஜபக்ஸ திடீர் விஜயம் Reviewed by NEWMANNAR on February 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.