அண்மைய செய்திகள்

recent
-

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 76 பேர் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) மற்றும் நாளை சனிக்கிழமை (12) கொண்டாடப்படுவதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 76 பக்தர்கள் மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு நோக்கி பயணமாகி உள்ளனர். கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து சுங்கத்துறை,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்த பின் படகுகளில் செல்ல அனுமதித்துள்ளனர். 

 பின்னர் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கச்சத்தீவு செல்லும் விசைப்படகுகளை முழுமையாக சோதனை செய்த பின் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். மேலும்,ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இன்று யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவில் பங்குதந்தை வசந்தம் தலைமையில் இலங்கை பக்தர்கள் 50 பேர் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி பின் திருச்சொரூப பவனி மற்றும் பிராத்தனைகள் நடைபெறும். 

நாளை சனிக்கிழமை (12) காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான முழு ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் இலங்கை இந்திய மீனவர்களை ஒன்றினைத்து மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதால் இந்திய மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி பாதுகாப்பு நலன் கருதி இன்றும், நாளையும் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என ராமேஸ்வரம் மீன் வளத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும்,300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர்.
          


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் 76 பேர் பங்கேற்பு Reviewed by Author on March 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.