அண்மைய செய்திகள்

recent
-

46 ஆண்டுகள் பழமையான ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது:

ஹொங்கொங்கில் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது. ஜம்போ கப்பல் உணவகம் ஹொங்கொங்கின் அடையாளங்களின் ஒன்றாகத் திகழ்ந்தது. 1976ஆம் ஆண்டில் சேவையை தொடங்கிய இந்தக் கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை தோற்றம் கொண்டது. பிரிட்டிஷ் ராணி எலிசபெத் முதல் ஹோலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்தக் கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 

ஆனால் கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கப்பல் உணவகத்தின் சேவை நிறுத்தப்பட்டது. இதன் பெரும் சுமை ஏற்பட்டதால் முழுவதுமாக நிறுத்தி விட்டதாக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தென் சீனக் கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தண்ணீர் உள்ளே நுழையத் தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயற்சித்தும் மீட்க முடியவில்லை என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
46 ஆண்டுகள் பழமையான ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது: Reviewed by Author on June 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.