அண்மைய செய்திகள்

recent
-

1,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பழுது பார்க்கப்பட்டு சேவையில் இணைக்கப்படும்!

டயர்கள், பட்டரிகள் மற்றும் ஏனைய உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது பயன்படுத்தப்படாத இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

 இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, இவ்வாறான 1,000 பஸ்கள் மீளமைக்கப்படும் என்றும், விலையேற்றம் காரணமாக முன்னைய குத்தகை மதிப்பீடுகள் இனி பொருந்தாது எனவும், கொள்வனவு சிரமம் காரணமாக பஸ்கள் இயங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விலையில் திருத்தம் செய்து தேவையான கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. 

 முந்தைய இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து 500 பஸ்கள் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பஸ்களை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


1,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பழுது பார்க்கப்பட்டு சேவையில் இணைக்கப்படும்! Reviewed by Author on July 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.