அண்மைய செய்திகள்

recent
-

நாடளாவிய ரீதியில் இதுவரை 15,000 மெட்ரிக் தொன் உரம் விநியோகம்

உர விநியோக நடவடிக்கைள் இவ்வாரத்திற்குள் முடிவிற்கு கொண்டுவரப்படுமென தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரை 15,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்தார். தற்போதைய சிறுபோகத்திற்காக பயன்படுத்தப்படும் 03 இலட்சம் ஹெக்டேயருக்கான உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கமைவாக, சிறுபோகத்திற்காக 1,60,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அது பயிர் நிலத்தின் 60 வீத செய்கைக்கு போதுமானது எனவும் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார். 

 அத்துடன், திரவ உர விநியோகமானது 85 வீதத்தை கடந்துள்ளது. இதனிடையே, 50 கிலோகிராம் யூரியா உர மூடையொன்றின் விலை 10,000 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட உதவி பணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சந்தன லொக்குஹேவா தெரிவித்தார். சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஈர வலயத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோகிராம் யூரியா உரம் வழங்கப்படுமெனவும் உலர் வலயத்தில் உள்ள நிலங்களுக்கு 100 கிலோகிராம் யூரியா வழங்கப்படுமெனவும் தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். அதிகபட்சமாக 02 ஹெக்டேயருக்கான உரம் விநியோகிக்கப்படும்.


நாடளாவிய ரீதியில் இதுவரை 15,000 மெட்ரிக் தொன் உரம் விநியோகம் Reviewed by Author on July 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.