அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட காமெடி நடிகர் போண்டா மணி- நிலைமை மோசமானதா?

இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர் நடிகர் போண்டா மணி. 1991ம் ஆண்டு பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழித் திரையுலகில் அறிமுகமான போண்டா மணி தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்தார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடைசியாக 2019ம் ஆண்டு தனிமை என்ற படத்தில் கடைசியாக நடித்தார். 

சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். மோசமான உடல்நிலை கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இப்போது மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம். அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாம். அவரது மேல் சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு சக நடிகரான பெஞ்சமின் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட காமெடி நடிகர் போண்டா மணி- நிலைமை மோசமானதா? Reviewed by Author on September 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.