அண்மைய செய்திகள்

recent
-

பாரம்பரியத்தை பறைசாற்றும் பிரித்தானிய ராணியின் வைர கிரீடமும் சுவாரஸ்யமும்!

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபேத் வசமிருந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், தற்போது மகாராணியின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னரானதையடுத்து, அவரது மனைவி கமிலா ராணியாகியுள்ளார். எனவே கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மகாராணி வசமிருந்த கிரீடம் 2ஆயிரத்து 800 வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதும் சிறிப்பம்சம். இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 கெரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோஹினூரில் எடுக்கப்பட்ட இந்த வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1851 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிற்காக பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வைரம் 1937 முதல் பிரித்தானியா ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கிறது. அப்போது முதல் பிரித்தானியா ராணிகள் அரசின் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் நேற்று வரை மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தின் வசம் இருந்து வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி கமில ராணியாக முடி சூடவுள்ளார். ஆகவே அந்த வைர கிரீடம் இனி புதிய ராணி கமில வசம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அது மட்டுமன்றி பிரித்தானியா மகாராணி தொடர்பில் பல சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் மகாராணி 2ஆம் எலிசபெத் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டிலேயே பிறந்தார் எனவும், அரண்மனையில் பிறக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிறந்த 17 Bruton Street என்ற கட்டிடம் இப்போது பிரபல சைனீஸ் உணவகமாக இயங்கி வருகிறது. இவர் 6 ஆம் கிங் ஜார்ஜ்ஜின் மறைவுக்குப் பின்னர் 1953 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி 25 வயதில் பிரித்தானியாவின் ராணியாக முடிசூட்டப்பட்டார். பிரித்தானியா வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஆட்சி புரிந்த அரச குடும்பத்தவர் என்ற புகழை ராணி இரண்டாம் எலிசபெத் அடைந்துள்ளார். 

70 ஆண்டுகள் 7 மாதங்கள் 2 நாட்கள் இவர் பிரித்தானியாவின் ராணியாக இருந்துள்ளார். அதேபோல், அதிகளவிலான புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளில் பதித்த அரச குடும்பத்தவர் என்ற பெருமையும் இவருக்கே சேரும். மேலும் உலகிலேயே அதிக நாடுகளுக்கு பயணித்த அரச குடும்பத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதுவரை 6 கண்டங்களில் உள்ள சுமார் 120 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதிலும் கனடா நாட்டிற்கு அதிக முறையாக 22 முறை பயணித்துள்ளார். பிரித்தானியா நாட்டிற்கு 13 முறை பயணித்துள்ளார். 


ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அவர் மறையும் வரை எந்த நாட்டிற்குமான பாஸ்போர்ட் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதுமடடுமன்றி, கார் ஓட்டுவது அவருக்கு பிடித்த செயல்களில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில், வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரம் இல்லாமல் கார் ஓட்ட உரிமை உள்ள ஒரே ஒரு அரச குடும்பத்தவர் இரண்டாம் எலிசெபெத் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர இரண்டாம் உலகப்போரின் போது அவர் இராணுவ வாகனத்தின் ஓட்டுநராக தன்னார்வத்துடன் பணியாற்றினார் என்றும் இதன்மூலம் அவர் இராணுவத்திற்கு பணிபுரிந்த முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாரம்பரியத்தை பறைசாற்றும் பிரித்தானிய ராணியின் வைர கிரீடமும் சுவாரஸ்யமும்! Reviewed by Author on September 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.