அண்மைய செய்திகள்

recent
-

அழிக்கப்பட்ட ஓர் இனக்குழுவிலிருந்து தப்பிப்பிழைத்த பிரேசிலின் இறுதி பழங்குடி மனிதர் 23-08-2022 அன்று இயற்கை எய்தியுள்ளார்.

ஐம்பத்தைந்து இலட்சம் சதுரக்கிலோமீற்றர் நிலப்பரப்பு கொண்ட அமேசான் எனும் மாபெரும் மழைக்காட்டின் 60% நிலப்பரப்பினை தனது எல்லைக்குள் கொண்டிருக்கிறது பிரேசில். பிரேசில் மற்றும் பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், பெயரிடப்படாத சில பழங்குடியினத்தவர்கள் வசித்துவந்ததாகவும், 1970 காலப்பகுதிகளில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற பண்ணையாளர்களால் இந்த பழங்குடிமக்கள் குரூரமாக கொல்லப்பட, இந்த கொலைவெறி தாக்குதலில் இறுதியாக உயிர்பிழைத்த ஏழுபேரில் ஆறுபேர் 1995-ஆம் ஆண்டு மீண்டும் தாக்கப்பட்டு இறந்துபோக, இவர்களில் இறுதியாக மிஞ்சியவர்தான் `Man of the Hole' (குழிகளின் நாயகன்) என்றழைக்கப்பட்ட பழங்குடி நபர்! விலங்குகளை வேட்டையாட, தன்னை தற்காத்துக்கொள்ள அவர் வசித்த பகுதியில் வித்தியாசமான குழிகளைத் தோண்டி வைத்திருந்ததால், அந்த நபருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 கடந்த 26 ஆண்டுகளாகத் தன்னந்தனியாக அந்த வனப்பகுதியில் பகுதியில் வாழ்ந்துவந்த அந்த மனிதரை 1996-ம் ஆண்டு முதல் பிரேசிலின் உள்நாட்டு விவகார ஏஜென்சியின் (ஃபுனாய்) முகவர்கள் கண்காணித்துவந்துள்ளனர். இப்படி கண்காணிக்கும்போதே கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதிக்குப்பின்னர் இவரது நடமாட்டம் தென்படாததும், பின் அவரது சடலம் அவரது குடிலருகில் கிடப்பதும் கண்டறியப்பட்டது. 60 வயதான அவர் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வசித்த குடிசை பகுதியில் கிடைத்த சான்றுகளின்படி அவர் சோளம், பப்பாளி, வாழை போன்ற பழங்களைப் பயிரிட்டதாக கூறப்பட்டுள்ளது. பிரேசிலில் தனாரு பகுதியில் வசித்த கடைசி பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் உயிரிழந்துவிட்டது பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாழும்போது கிடைத்திராத அனுதாபமும் கவனஈர்ப்பும் தற்போது அவரது மரணத்தின்மூலம் கிடைத்திருக்கிறது என்றே கூறவேண்டியுள்ளது!


அழிக்கப்பட்ட ஓர் இனக்குழுவிலிருந்து தப்பிப்பிழைத்த பிரேசிலின் இறுதி பழங்குடி மனிதர் 23-08-2022 அன்று இயற்கை எய்தியுள்ளார். Reviewed by Author on September 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.