அண்மைய செய்திகள்

recent
-

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி முத்து? சோகத்தை ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி முத்து வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பி முத்து தனது குடும்பத்தினரிடம் பேசும்போது கண்கலங்கிவிடுகிறார். 

எப்போதும் கலகலப்பாக வலம்வரும் ஜி.பி முத்து, சக போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே உரையாடி வருகிறார். அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த ஜி.பி முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.இந்நிலையில், இன்று பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமலிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே ஜி.பி முத்து சென்றிருக்கிறார். துவக்கம் முதலே, பெரும் ரசிகர்களை கொண்டிருந்த முத்து, போட்டியில் இருந்து வெளியேறியதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி முத்து? சோகத்தை ரசிகர்கள் Reviewed by Author on October 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.