அண்மைய செய்திகள்

recent
-

நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?

மெக்கா அல்லது மதீனாவில் இஸ்லாம் பரப்பப்படுவதற்கு முன்பே நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தொடக்கத்தில் நோன்பு இன்று உள்ளது போல் இருக்கவில்லை.

இஸ்லாத்தின் நபி ஹஸ்ரத் முகமது இடையிடையே நோன்பை கடைப்பிடித்திருந்தாலும்கூட ஆரம்ப காலத்தில் அவரது தோழர்களுக்கோ அல்லது பின்பற்றுபவர்களுக்கோ 30 நாட்கள் நோன்பு கட்டாயமாக இருக்கவில்லை.

ஹஸ்ரத் முகமதுவின் ஹிஜ்ரத் அதாவது மெக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த (கி.பி. 622) இரண்டாம் ஆண்டு அதாவது கி.பி. 624 இல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது அல்லது கட்டாயமாக்கப்பட்டது.

அன்று முதல் உலகம் முழுவதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரமலானைப் போல் இல்லாவிட்டாலும், நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பது போன்ற மத மரபுகள் யூதர்களிடமும், வேறு பல இனத்தவர்களிடமும் காணப்படுகின்றன.

ஆனால் நோன்பு, இஸ்லாத்தின் ஐந்து முக்கிய மத தூண்களில் ஒன்றாகும். மீதமுள்ள நான்கும் முறையே ஒரே கடவுள் நம்பிக்கை, நமாஸ், ஜகாத் மற்றும் ஹஜ் ஆகும்.


நோன்பானது ஃபர்ஸ் (கட்டாயம்) ஆக்கப்பட்ட ஆண்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 622 ஆம் ஆண்டில் இஸ்லாமிய நபி, ஸஹாபி (தோழர்கள்) உடன் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். இஸ்லாத்தில் இது ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் நடந்த தேதியிலிருந்து, முஸ்லிம்களின் ஆண்டு எண்ணும் பணி தொடங்கியது.

ஹிஜ்ரியின் இரண்டாம் ஆண்டில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மத நூலான குர்ஆனால் கட்டாயமாக்கப்பட்டது அல்லது கடமையாக்கப்பட்டது என்று இஸ்லாமிய நிபுணர்கள் கூறுகின்றனர்.


நோன்பு கடமையாக்கப்பட்ட குரானின் வசனம் முந்தைய சாதியினரும் நோன்பு நோற்கக் கடமைப்பட்டதாகக் கூறுகிறது" என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வித் துறையின் ஆசிரியரான டாக்டர் ஷம்சுல் ஆலம் பிபிசி பங்களா சேவையிடம் தெரிவித்தார்.

”உண்ணா நோன்பு ஏற்கனவே வெவ்வேறு சாதியினரிடையே பரவலாக இருந்தது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம், இருப்பினும் அதன் வடிவம் வேறுபட்டது. உதாரணமாக, யூதர்கள் இப்போதும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பல இனத்தவரும் அத்தகைய பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர்.”

அந்த நேரத்தில் மெக்கா அல்லது மதீனாவில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட தேதிகளில் நோன்பு நோற்பார்கள். பலர் ஆஷுரா அன்று அதாவது மொஹரம் மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு நோற்பார்கள். இது தவிர சிலர் சந்திர மாதத்தின் 13, 14, 15 ஆகிய நாட்களில் விரதம் இருப்பது வழக்கம்.

"மற்ற தீர்க்கதரிசிகளுக்கு நோன்பு, கடமையாக இருந்தது. ஆனால் அது பகுதியளவு இருந்தது. ஒரு மாதம் நீடிக்கவில்லை," என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் பேராசிரியரான டாக்டர் அதாவுர் ரஹ்மான் மியாஜி பிபிசி பங்களாவிடம் கூறினார்.

"இஸ்லாத்தின் நபியும் மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் ஒரு சந்திர மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள். இது ஒரு வருடத்தில் 36 நாட்கள் ஆகும். ஏற்கனவே நோன்பு இருக்கும் மரபு இருந்தது என்பது இதன் பொருள்."

இஸ்லாமிய வரலாற்றைக் குறிப்பிட்ட அவர், ஆதாம் காலத்தில் ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்கப்பட்டதாகவும், நபி தாவூத் காலத்தில் தலா ஒரு நாள் இடைவெளியில் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினார். மூஸா நபி முதலில் துரா மலையில் 30 நாட்கள் நோன்பு நோற்றிருந்தார். பின்னர் மேலும் பத்து நாட்கள் சேர்த்து, தொடர்ந்து 40 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஹஸ்ரத் முகமது 622 ஆம் ஆண்டு மெக்காவிலிருந்து மதீனாவிற்கு குடிபெயர்ந்த பிறகு மதீனா மக்கள் ஆஷுரா நாளில் (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்பதை கண்டார். அதன் பிறகு அவரும் அவ்வாறே உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

"முந்தைய நபிகள் 30 நாட்கள் நோன்பு நோற்பது கட்டாயமாக இருக்கவில்லை. சில தீர்க்கதரிசிகளுக்கு ஆஷுரா நோன்பு நோற்பது கட்டாயமாக இருந்தது. மற்றவர்களுக்கு சந்திர மாதத்தின் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது,” என்று இஸ்லாமிய அறக்கட்டளையின் துணை இயக்குனர் டாக்டர் முகமது ஆபு சாலே பட்வாரி பிபிசி பங்களாவிடம் கூறினார்,

ஹஸ்ரத் முகமது மெக்காவில் தங்கியிருந்த காலத்தில் நோன்பு கடைப்பிடித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.


நோன்பிற்கும் மூஸாவுக்கும் என்ன தொடர்பு?

மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹஸரத் முகமது, மதீனாவாசிகள் ஆஷுரா தேதியில் நோன்பு நோற்பதைக் கண்டார். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். இந்த நாளில்தான் அல்லாஹ், ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து மூஸாவை விடுவித்தார். எனவே நாங்கள் நோம்பிருக்கிறோம் என்று அவர்கள் பதில் அளித்தனர்.

பிறகு அவரும் உண்ணாவிரதம் இருந்து, அதை கடைப்பிடிக்குமாறு தனது தோழர்களிடமும் கூறினார். அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் கூறினார்.

ஹஸரத் முகமது, சந்திர மாதத்தின் 13, 14, 15 ஆகிய நாட்களில் தாமாகவே நோன்பு நோற்றதாக டாக்டர் பட்வாரி கூறுகிறார்.

ஆதாம் நபியின் காலத்தில் சந்திர மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு நோற்கப்பட்டதாக இஸ்லாமிய மத வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மூஸா நபியின் காலத்தில் ஆஷுரா நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. அரபு நாடுகளில் இவ்விரு தேதிகளில் நோன்பு நோற்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் காலத்தில் தான் 30 நாட்கள் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது.

"இஸ்லாத்தின் நபிகள் இந்த இரண்டு நோன்புகளையும் நஃபிலாக அதாவது தானாக முன்வந்து கடைப்பிடித்தார். அவர் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டுக்கு முன், எந்த நோன்பையும் கடமையாகக் கடைப்பிடிக்கவில்லை,"என்று டாக்டர் முகமது ஆபு சாலே பட்வாரி கூறுகிறார்.

624ஆம் ஆண்டு குர்ஆன் வசனத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது.

எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலை காரணமாக நோன்பு கட்டாயமாக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு, அல்லாஹ் அவர்களின் பிரச்சனையை புரிந்துகொண்டு, இனிமேல் நோன்பை விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த பாரம்பரியம் இறுதியானது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்ட ரமலான் மாதத்தில் நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பேரீச்சம்பழம், தண்ணீர், இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றை விரதம் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் உட்கொள்ளலாம்.

"அரேபியாவில் மக்கள் செஹ்ரி மற்றும் இஃப்தாரில் ஒரே மாதிரியான உணவை உண்பார்கள். இதில் பேரீச்சம்பழம் மற்றும் ஜம்ஜம் தண்ணீரும்( புனிதமாக கருதப்படும் மெக்காவின் ஒரு கிணற்றின் நீர்) அடங்கும். சில சமயங்களில் அவர்கள் ஒட்டகம் அல்லது ஆட்டுப்பால் குடித்துவிட்டு இறைச்சியையும் சாப்பிடுவார்கள்," என்று டாக்டர் ஷம்சுல் ஆலம் குறிப்பிட்டார்.









நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது? Reviewed by NEWMANNAR on March 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.