வவுனியாவில் மீட்கப்பட்ட நால்வரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு; மரணத்திற்கான காரணம் தெரியவில்லை
வவுனியா சட்ட மருத்துவ அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் குறித்த சடலங்கள் உறவினர்களிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டன.
எனினும், பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான தௌிவான காரணம் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நால்வரது சடலங்களும் வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
நாளை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் மீட்கப்பட்ட நால்வரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு; மரணத்திற்கான காரணம் தெரியவில்லை
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment