நானாட்டான் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி மர நடுகை ஆரம்பம்.
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் "மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை தினமாகும். அதற்கமைய நானாட்டான் பிரதேச சபையால் நானாட்டான் சுற்றுவட்ட பகுதி மற்றும் பொது விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை நாட்டியிருந்தனர்.
குறித்த மரம் நடு கையில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அன்ரன் அன்று ராஜன், உப தவிசாளர் ஞானராஜ் சோசை, நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ,பிரதேச சபை உறுப்பினர்கள், ,இராணுவத்தினர், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாடு பூராகவும் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய குறித்த வாரத்தில் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை , சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ,வருமான ஊக்குவிப்பு, இலக்கியம் மற்றும் கல்வி நூலகம், பொது மக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை உள்ளடக்கிய வாரம் செயல்படுத்தப்படவுள்ளது.

No comments:
Post a Comment