அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சமுர்த்தியில் இருந்து நீக்கப்பட்ட பயனாளிகள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

 நலன்புரி நன்மைகள் சபையினால்   வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில்  மன்னாரில்  விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் முன்னெடுத்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (23) மதியம் முடிவுக்கு வந்துள்ளது.


இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை முதல் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை முதல் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி  புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமக்கு உரிய தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது மாவட்டச் செயலக பிரதான வீதி பகுதியில் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபட்டனர்.சிறிது நேரம் மாவட்டச் செயலகத்தினுல் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமது தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்டச் செயலகத்திற்கு செல்ல இருந்தவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் என பிரதான வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து சேவைகள் சிறிது நேரம் பாதீப்படைந்திருந்தது.

இந்த நிலையில்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர் .குமரேஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந் ஆகியோர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சிலரை அழைத்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.இதன் போது பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக கலந்து கொண்டவர்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.

குறிப்பாக நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் பணம் வசதி உடைய மற்றும்  மாடி வீடுகளில் வசிப்பவர்களும் உள்வாங்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள், சிறுநீரக நோயாளிகள்,சொந்த வீடு இல்லாதவர்கள், உட்பட பலரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறித்த பட்டியல் பொருத்தமற்றது என தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் வீட்டுத் திட்டத்தால் கடனாளிகளாக உள்ளதாகவும் இன்னும் பல பெண்கள் நுண் நிதி நிறுவனக்களில் கடன் பெற்று வாழும் இவ்வாறான நிலையில் சமுர்த்தி கொடுப்பனவு பட்டியலில் தங்கள் பெயர் நீக்கப்பட்டமை தங்களை ஏழ்மையில் தள்ள  அரசாங்கம் மேற்கொள்ளும் வேலை எனவும்  சுட்டிக்காட்டிக் காட்டியுள்ளனர்.

-இதன் போது பதில் வழங்கிய அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் ,,,

-குறித்த திட்டம் நாடு முழுவதும் ஒரு திட்டத்தினுல் கொண்டு வரப்பட்டுள்ளது.உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாத அல்லது நி நிறாகரிக்கப்பட்டுள்ளவர்கள் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

குறித்த மேன்முறையீடு விண்ணப்பம் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

பிரதேசச் செயலகங்களில் இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஒரு திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள மையினால் என்னால் அல்லது பிரதேச செயலாளரினாலே எதுவும் செய்ய முடியாது.

இந்த நிலையில்  உங்கள் பிரச்சினையை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.30 ஆம் திகதிக்கு பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் விசாரணைக்குழு நியமிக்கப்படும்.

அந்த விசாரணைக்குழு உங்கள் மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனை செய்து உங்களிடம் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

அதன் பின்னரே தெரிவு பட்டியிலில் தகுதி உள்ளவரா?,இல்லையா என்ற தெரிவு இடம்பெறும்.அதன் பின்னர் இறுதி தெரிவு பட்டியல் அனுப்பப்படும்.

தற்போது இணையத்தில் வெளிவந்துள்ள பெயர் பட்டியல் இறுதி தெரிவு பட்டியல் இல்லை.

நீங்கள் ஆரம்பத்தில் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பதிவேற்றப்பட்டுள்ளது.எதிர்வரும் 30ஆம் திகதி வரை உங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.பெயர் நீக்கப்பட்டுள்ளது.அவர்கள் மேல் முறையீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே அனைவரும் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அதன் பின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இதேவேளை 

மேன்முறையீடு மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை பதிவு செய்வதற்கான இணைய வழி அமைப்பு ஒழுங்காக இயங்கவில்லை எனவும் அவ்வாறு தாங்கள் பதிவு செய்யும் போது அவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் வரை கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்குமாறு இல்லாவிட்டல் தாங்கள் தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகுழந்தைகளுடனும் இன்னும் சிலர் நோயாளர் கிளிக் கொப்பிகள் உள்ளிட்ட ஆவணங்களுடனும் வீதிகளில் அமர்ந்து காலை தொடக்கம் ஆர்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்

அதே நேரம் 20 க்கு மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு தொடக்கம் அதிகாலை வரை  மாவட்ட செயலகத்தினும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது





















மன்னாரில் சமுர்த்தியில் இருந்து நீக்கப்பட்ட பயனாளிகள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் Reviewed by NEWMANNAR on June 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.