அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கச்சான் உற்பத்தியை மேற்கொண்டு அறுவடையை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

மன்னார் மாவட்டத்தில் கச்சான் கடலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி வைக்கப்பட்டது. மெசிடோ நிறுவனம் வைற்றல் திட்ட நிதி  அனுசரனையுடன், குறித்த குடும்பங்களுக்கு கச்சான் உற்பத்தியை மேற்கொள்ள உதவிகளை வழங்கி வைத்துள்ளனர். 


அதன் அடிப்படையில் மாந்தை  மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   பரப்புக்கடந்தான்   மேற்கு  கிராமத்தில்   தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கும் கச்சான் செய்கை யை மேற்கொள்ள 20 கிலோ விதை கச்சான் வழங்கப்பட்டது.

குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த பத்மினி என்ற பெண் கச்சான் பயிரிட்டு தற்போது கச்சான அறுவடையை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளார்.

20 கிலோ கச்சான் விதைத்து தற்போது 200 கிலோ பச்சை    கச்சானை அறுவடை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.


தற்போது கச்சான் அறுவடை மேற்கொண்டு வரும் பரப்புக்கடந்தான் மேற்கு  கிராமத்தில் வசித்து வரும் பத்மினி என்ற பெண் தெரிவிக்கையில்,,,

மெசிடோ நிறுவனத்தினால் கச்சான் உற்பத்தியை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளில் ஒருவராக என்னையும் தெரிவு செய்தனர்.

கச்சான் உற்பத்தியை மேற்கொள்ள 20 கிலோ விதை கச்சான் எனக்கு வழங்கப்பட்டது.

என்னிடம் உள்ள காணியில் எனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க அரை ஏக்கர் காணியில் கச்சான் பயிரிட்டேன்.

தற்போது மூன்று மாத முடிவில்  கச்சான் அறுவடை செய்யும் நிலையில் உள்ளேன்.தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளேன்.

சுமார் 200 கிலோ கச்சான் எதிர் பார்த்துள்ளேன்.இதன்மூலம் எனது செலவினங்கள் போக சுமார் ஒரு லட்சம் ரூபா வரை இலாபமாக எதிர் பார்த்துள்ளேன்.

இதன் மூலம் எனது வாழ்வாதாரத்தை உயர்த்தி,பிள்ளைகளின் கல்வி செலவையும் ஈடு செய்ய எதிர் பார்த்துள்ளேன்.என அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மன்னார் மாவட்டத்தில் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மெசிடோ நிறுவனம் தற்போது பல்வேறு சுய தொழில் உற்பத்தி வழங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான பணியாளர்கள் இணைந்து மாவட்டத்தில் பல்வேறு வாழ்வாதார உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.மன்னாரில் கச்சான் உற்பத்தியை மேற்கொண்டு அறுவடையை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் Reviewed by NEWMANNAR on June 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.