அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி-மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் 13 பேர் 9ஏ சித்தி பெற்று முன்னிலை

 நடைபெற்ற  2022-2023   ஆண்டுக்கான   க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார்  கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து 1275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.


  அதனடிப்படையில்   மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் 13 பேர் 9ஏ சித்தி பெற்று   முன்னிலை வகிக்கின்றனர்.

 மன்னார்   புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 04 மாணவர்களும்,  சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் 04 மாணவர்களும்,  வங்காலை சென் ஆனால் கல்லூரியில் 04 மாணவர்களும், முருங்கன் மத்திய கல்லூரியில் 03 மாணவர்களும், நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 02 மாணவர்களும் , அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ,எருக்கலம் பிட்டி மகளிர் பாடசாலை, பேசாலை சென்.பற்றிமா மகா வித்தியாலயம் , மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலை ஆகியவற்றில் தலா ஒரு மாணவர்களும், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.









மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி-மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் 13 பேர் 9ஏ சித்தி பெற்று முன்னிலை Reviewed by Author on December 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.