அண்மைய செய்திகள்

recent
-

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கோரி இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம்: 800க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்.

 இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று(23) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்களை படகுடன் விடுதலை செய்யாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


 ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த புதன் கிழமை மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஐந்து படகையும் அதிலிருந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.


 மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மீன்பிடிக்க  சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விசைப்படையின் ஓட்டுநர்கள் ஐந்து பேர் உட்பட 37 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


 மேலும் வரும் 8ந் தேதி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.


 வரும் மக்களவைத் தேர்தலுக்குள் மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க போவதாக தீர்மானித்துள்ளனர்.


 வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது .


இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10,000 மீனவர்கள் நேரடியாகவும் 50,000 மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.



ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கோரி இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம்: 800க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம். Reviewed by Author on March 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.