அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் யுக்திய சுற்றி வளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸார்

 யுக்திய சுற்றி வளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற  பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னக்கோன் அறிமுகப்படுத்திய நிலையில் மன்னார் நகரப்பகுதியில் உள்ள வாகனங்களில் குறித்த அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (20) ஒட்டப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத்  107 என்ற  பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை மன்னாரில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டி ஆரம்பித்து வைத்தார்.


இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே,பொன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார் கலந்து கொண்டு விழிர்ப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர்.


சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயல் முறையில் கீழ் நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள யுக்திய சுற்றி வளைப்பின் போது வடக்கில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்கள்,மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கும் வகையில் வடமாகாணத்திற்கு என அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம்   அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில்  மன்னார் மாவட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  


மன்னார் நகரில் உள்ள முச்சக்கர வண்டிகள்,அரச தனியார் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்ட மை குறிப்பிடத்தக்கது



மன்னாரில் யுக்திய சுற்றி வளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸார் Reviewed by Author on March 20, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.