அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு வவுனியாவில் பிரஜாவுரிமை வழங்கி வைப்பு

 இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்பட்டது.


வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (05.03) இந்நிகழ்வு இடம்பெற்றது.


1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்கள் அகதிகளாக இந்தியாவில் தங்கியிருந்த நிலையில் இந்தியாவில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருந்தன. அவர்கள் அங்கு வசித்து வந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர்.


நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்ததுடன், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களையும், அரச உதவித் திட்டங்களையும் பெற முடியாது கஸ்ரப்பட்டனர்.


இதனை அடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுசரனையில் ஒபர் சிலோன் எனப்படும் அரசு சார்பற்ற நிறுவன பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு  பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.


இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தற்போது வசித்து வருகின்றனர்.


இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ.எச்.ஜி. பிரசங்க, ஒபர் சிலோன் நிறுவன தலைவி சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு வவுனியாவில் பிரஜாவுரிமை வழங்கி வைப்பு Reviewed by Author on March 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.