Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

மன்னார் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் ஒரே நாளில் நான்கு திறப்பு விழாக்கள்....படங்கள் இணைப்பு


மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் 23-05-2017 செவ்வாய் காலை 11 மணியளவில் இடம்பெற்ற திறப்புவிழாவில் 04 வேறுபட்ட விடயங்கள் திறந்துவைக்கப்பட்டது.

 நிகழ்வில்.....
கெளரவ விருந்தினராக
 தட்சணாமருதமடு ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பன்னீர்ச்செல்வம் சர்மா அவர்களும்,
பிரதம விருந்தினராக
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
மடு கல்வி வலய பணிப்பாளர் டி.ஜோன்குயின்டஸ் அவர்களும், மடு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.றொகான் குருஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வை கல்லூரியின் அதிபர் ஜெராட் அல்மேடா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இவ் நிகழ்வில் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் " அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ்" புனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும், புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துவிச்சக்கரவண்டி நிறுத்தகம் மற்றும் பாடசாலை பிரதான நுழைவாயில் வளைவு ஆகிய நான்கு பிரதான விடயங்கள் சுமார் 10.05 (பத்து தசம் ஐந்து) மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு அவை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் பாடசாலைகளுக்கு பெளதீக வளங்களை நாம் நிறைவாக செய்து தரும்போது அதன் பலன் அல்லது வெளிப்பாடு மாணவர்களது கல்வியின் வெளிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது என்றும், அவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்தும் நல்லதொரு ஆசிரியர்குழாமை இயக்குகின்ற அதிபரை தாம் பாராட்டுவதாகவும் அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாதாரண தர பெறுபேறுகள் உயர்வுநிலையை அடைந்துள்ளமை சந்தோஷத்தை தருவதாகவும் தொடர்ந்து இதே வேகத்துடனும் விடா முயற்சியுடனும் மாணவர்சமூகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் அயராது உழைத்து மடு வலயத்தின் கல்வி நிலையை மென்மேலும் உயர்த்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு.
அதிபரது வேண்டுகோளிற்கிணங்க இந்த பாடசாலையின் கேட்ப்போர்கூடத்திற்கான கதிரைத்தொகுதியை இந்த ஆண்டு எனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதிவழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய ஆசிரியர் விடுதியையும் அமைச்சர் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.
 


வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் சித்திரைப் புத்தாண்டு விழா


வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு விழா பாடசாலை அதிபர் தி.யுவராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த விழா இன்று காலை பாசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி கல்விப்பணிப்பாளர் மூ.த.சின்னையா, சிறப்பு விருந்தினராக பாடசாலை மேம்பாட்டு பிரதிநிதி ந.கிறேனியர், ஆசிரிய ஆலோசகர் கு.அருள்ராணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடன் வவுனியா முஸ்ஸிம் பாடசாலை ஆசிரியர்கள் எ.ஜோய், ரி.சதீஸ், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்; பாராளுமன்றத்தின் அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வு.Photos)

மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத்தின் 3ஆம் கட்ட அமர்வானது நேற்று(17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட அமைச்சுக்கள் தாங்கள் நடை முறைப்படுத்த இருக்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தும் அதனை நடை முறைப்படுத்துவதற்க்கான ஆலோசனைகள் பற்றியும் கலந்துரையாடல்களை மேற்கொண்கொடுள்ளனர்.#


-மன்னார் நிருபர்-

(17-05-2017)
மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் 58 வருட ஆண்டு நிறைவு விழா- படமே செய்தி

மன்/சித்திவிநாயகர் இந்துத் தேசிய பாடசாலையின்  58 வருட ஆண்டு நிறைவு விழா படமே செய்தி

படங்கள் Kumanan Sivam


Photos