அண்மைய செய்திகள்

recent
-

‘துயரத்தில் இருந்து மீள முயற்சிக்கிறேன்’ மாயமான MH370இல் பயணித்த சந்திரிக்காவின் கணவர் உருக்கம்

மாயமான மலேசிய விமானம் தொடர்பாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட துயரச் செய்தியில் இருந்து மீள முயற்சிப்பதாக, குறித்த விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த சந்திரிகாவின் கணவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் திகதி சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது.

16 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலுக்குப் பின்னர், மாயமான விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரப்பூர்வமாக கடந்த திங்களன்று அறிவித்தார்.

விமானத்தில் பயணித்த 239 பயணிகளில் 5 இந்தியர்களும் அடங்குகின்றனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா என்பவரும் பயணித்தார்.

இந்நிலையில், மலேசிய பிரதமரின் அறிவிப்புக்குப் பின், சந்திரிகாவின் கணவர் கூறுகையில், “என்னால் இந்தத் தகவலை நம்ப முடியவில்லை. இந்தச் செய்தியில் இருந்து மீள முயற்சிக்கிறோம். இந்த தருணம் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், சந்திரிகாவிற்கு அந்தப் பயணம் மிகுந்த வலிகளை தந்திருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
‘துயரத்தில் இருந்து மீள முயற்சிக்கிறேன்’ மாயமான MH370இல் பயணித்த சந்திரிக்காவின் கணவர் உருக்கம் Reviewed by NEWMANNAR on March 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.