வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்தில் காயமடைந்து கிராமசேவகர் மரணம்
வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கிராம சேவகரான கந்தன் மார்க்கண்டு மரணமடைந்துள்ளார் என வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.
ஓமந்தை பகுதியில் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நிலையில் வீதியை கடக்க முற்பட்ட சமயம் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் மயக்கமடைந்தார்.
இந் நிலையில் உடனடியாக மயக்கமடைந்த கிராமசேவகரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நள்ளிரவு அவர் மரணமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய கிராம சேவகர் தலைக்கவசத்தின் பட்டியை இடாமையினால் விபத்தில் தலைக்கவசம் கழன்று சென்றமையினாலேயே தலையில் தாக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்தில் காயமடைந்து கிராமசேவகர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment