மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையின் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு
மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ‘அஸ்லம்’ என்ற அமைப்பு ஒரு தொகுதி பொருட்களை நேற்று செவ்வாய்க்கிழமை(25) பாடசாலையின் அதிபரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட நவீன உற்பத்தி சாதனங்களை கையளித்துள்ளனர்.
குறித்த நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான், அஸ்லம் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.இருஸாட், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் ஆகியோர் இணைந்து பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் அவர்களிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலையின் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:

No comments:
Post a Comment