முப்பது வருடமாக சீர் செய்யப்படாத நிலையில் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேசங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதை.
மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேசங்கள் இரண்டுக்குமான பிரதான போக்குவரத்து பாதையாகவுள்ள மல்லாவிமுதலாம் யூனிட் சந்தி தொடக்கம் மாந்தை கிழக்கு எல்லை வரையான மூன்று கிலோமீற்றர் தூரமான பிரதான வீதிசுமார் 30 வருட காலமாக சீர் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறிப்பிட்ட பாதை குன்றும் குழியுமாக உள்ளதால் காலை மாலை என நடைபெற்றுவந்த இரண்டு போக்குவரத்துசேவைகளும் நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.
இவை தொடர்பில் நேரில் ஆய்வுகளை மேற்கொண்ட ரவிகரன் பாதையின் சீர்கேட்டினால் போக்குவரத்து சேவைநிறுத்தப்பட்டதன் மூலமாக பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் முதற்கொண்டு நாளாந்த தேவைகளைநிறைவேற்றிக்கொள்ளும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாவதையும்அவதானித்தார்.
இவை தொடர்பில் மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் இது தொடர்பில் உரையாடி நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
முப்பது வருடமாக சீர் செய்யப்படாத நிலையில் மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேசங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதை.
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:

No comments:
Post a Comment