அண்மைய செய்திகள்

recent
-

நீதிமன்றங்களில் பறிமுதல் செய்யப்படும் மணல் மற்றும் மரங்கள் வணக்கஸ்தலங்களுக்கு சலுகை விலையில்.....

நீதிமன்றங்களில் பறிமுதல் செய்யப்படும் மணல் மற்றும் மரங்கள் போன்றவை
வணக்கஸ்தலங்களுக்கு சலுகை விலையில் வழஙகப்படவுள்ளன. 

அதற்கான சுற்றுநிருபம் நீதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்படும் அல்லது மறுசீரமைப்பு செய்யப்படும் வணக்கஸ்தலங்களுக்கு பயன்படுத்துவதற்கு தேவைகருதி 10 கியுப் மண் மற்றும் 100 கியுப் அடி மரங்கள் வழங்கப்படவுள்ளன. 

மணல் மற்றும் மரங்கள் தேவைப்படும் வணக்கத் தலங்களின் தலைவர்கள் நீதி அமைச்சினால் வழங்கப்படும் விண்ணப்ப பத்திரத்தைப் பெற்று பூர்த்திசெய்து தத்தமது பகுதி பிரதேச செயலரின் சிபார்சுடன் பௌத்த சாசன மத வழிபாட்டு அமைச்சிற்கு விண்ணப்பிக்கவேண்டும்.அங்கு முன்னுரிமை அடிப்படையில் வணக்க ஸ்தலங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் விவரம் நீதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும். 

நீதி அமைச்சின் செயலாளர் விண்ணப்பத்திற்கான அங்கீகாரம் வழங்கிய பின்னர் மணல் அல்லது மரம் குறித்த வணக்கஸ்தலத்திற்கு வழங்கப்படுமென சுறறுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணல் ஒரு கியுப் 1000 ரூபாவுக்கும், மரம் 1கியுப் அடி சம்பந்தமாக மாவட்ட கட்டுப்பாட்டு குழுவின் விலையில் 15 வீதத்துக்கும் சம்பந்தப்பட்ட வணக்க ஸ்தலங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்களில் பறிமுதல் செய்யப்படும் மணல் மற்றும் மரங்கள் வணக்கஸ்தலங்களுக்கு சலுகை விலையில்..... Reviewed by NEWMANNAR on March 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.