மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக கல்வி சேவை ஆற்றிய வாசுகி சுதாகருக்கு பதவி உயர்வு
மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனையில் பல வருடங்களாக சிறப்பான கல்வி நிர்வாக பணியை வழங்கி தற்போது வவுனியாவில் பணியாற்றிவரும் திருமதி வாசுகி சுதாகர் அவர்களுக்கு கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கான பதவி உயர்வு கிடைத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இவர் பணியாற்றிய போது மன்னார் வலயம் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகளை நிலை நாட்டியிருந்ததுடன் மடு கல்வி வலயத்திலும் பல்வேறு பணிகளை முன்னெடுத்திருந்தார்
இவ்வாறான நிலையில் கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுடன் பதவி உயர்வு பெற்று கல்வி நிர்வாக சேவையில் இவர் பணியாற்றவுள்ளார்
தற்போது வவுனியாவில் கல்வி சேவையில் பணியாற்றி வருகின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் வலய கல்வி பணிப்பாளருக்கான வெற்றிடம் நீண்டகாலமாக நிலவி வருகின்ற நிலையில் வலய கல்வி பணிபாளராக திருமதி வாசுகி சுதாகரை நியமிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
June 14, 2025
Rating:


No comments:
Post a Comment