மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளன
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அடுத்த அமர்வுகளை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் மாந்தை மேற்கிலும், 10 ஆம் திகதி மன்னாரிலும், 11 ஆம் திகதி மடுவிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளன.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அண்மையில் நியமித்திருந்ததார்.
இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு முதற்தடவையாக மன்னாரில் அமர்வுகளை நடத்தி மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
சுயாதீனமான நேரடி உள்ளக விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எண்ணியுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.
மன்னாரில் காணாமற்போனோர் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளன
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment