திரையுலகில் ஆணாதிக்கம் சமந்தா சாடல்
கமர்ஷியல் படங்களில் நடித்து சலித்துவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார் சமந்தா. கவர்ச்சிக்கு இடம் தராமல் ஆரம்ப கால படங்களில் நடித்து வந்த சமந்தா தற்போது படு கவர்ச்சிக்கு ஓகே சொல்கிறார். கமர்ஷியல் படங்களில் நடிப்பது போர் அடிக்கிறதா என்றபோது பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:திரையுலகில் ஆணாதிக்கம்தான் அதிகம்.
இந்த சூழலில் ஹீரோயின்களுக்கு நல்ல வேடம் என்பது அரிதுதான்.
தனிப்பட்ட முறையில் ஹீரோயினை மையமாக வைத்து எழுதப்படும் கதைகளில் வேண்டுமானால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எதிர்ப்பார்க்கலாம். மற்றபடி கமர்ஷியல் படங்கள் என்பது தவிர்க்க முடியாதது. இந்தியில் வெளியான குயின் ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். ஒரிஜினல் கதையில் கொண்டுவரப்பட்ட உணர்வுகள் ரீமேக்கில் வருமா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது.
அதனால் ஏற்கவில்லை.
இதுபோல் ஹீரோயினை மையமாக வைத்து வலுவான கதை வந்தால் அதில் நடிப்பேன்.திருமணம் எப்போது, காதலை பற்றி கூறுங்கள் என சிலர் கேட்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. பெண் என்றாலே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்றுதான் சமூகம் விரும்புகிறது. திருமணத்தை தாண்டி சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அது ஆண்களுக்கு மட¢டும்தான் என்ற நினைப்பு மாற வேண்டும்
திரையுலகில் ஆணாதிக்கம் சமந்தா சாடல்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment