திரிஷாவுடன் நடிப்பதா? அஞ்சலி அதிர்ச்சி
திரிஷாவுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதா என அதிர்ச்சி அடைந்தார் அஞ்சலி. சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். படத்தில் ஒரே ஹீரோயின், அவர் அஞ்சலிதான் என பேசப்பட்டது. இதனால் அஞ்சலி குஷியாக இருந்தார்.
இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு வலம் வரலாம் என திட்டம் போட்டார்.
படத்தில் கவர்ச்சியான கிராமத்து பெண் கேரக்டர் என்பதால் ரசிகர்களை ஈர்க¢கலாம் என்றும் கணக்கு போட்டிருந்தார். இந்நிலையில்தான் அவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்தது. படத்தில் அவர் செகண்ட் ஹீரோயின்தானாம்.
முதல் ஹீரோயினாக திரிஷா ஒப்பந்தமாகிவிட்டார் என செய்தி பரவியது. இது உறுதி என தெரிந்ததும் அஞ்சலி அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் படத்தில் அவர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
காரணம், இவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் 50 சதவீதம் ஏற்கனவே நடித்துவிட்டாராம்.
படத்துக்கான அட்வான்ஸ் தொகையும் அவர் வாங்கிவிட்டார். இதனால் அவர் படத்திலிருந்து விலக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். தொடர்ந்து நடித்து கொடுத்துவிட்டு, இனி சோலோ ஹீரோயின் வேடம் வந்தால் மட்டுமே ஏற்க வேண்டும் என தீர்மானமாக இருக்கிறாராம் அஞ்சலி.
திரிஷாவுடன் நடிப்பதா? அஞ்சலி அதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment