இந்தியாவில் 732 வயதுடைய பெண் ?
சத்தீஸ்கரின் தொழிலாளர் நலத்துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் ஒருவருக்கு அளித்திருக்கும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் அகர்வால் என்ற சமூக ஆர்வலருக்கு அத்துறையினர் அளித்துள்ள தகவலில், கடந்த ஆண்டு அந்த மாநிலத்தின் சைக்கிள் விநியோக திட்டத்தின்படி, ராய்பூரில் வசிக்கும் பூஷ்பா சஹு என்பவருக்கு 732 வயது என்றும், அவர்தான் உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு இத்திட்டத்தின்படி, சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் குறித்து சஞ்சய் அகர்வாலுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ராய்பூர் மாவட்டத்தில், 100 முதல் 732 வரையிலான வயதுடைய 7000 பெண்மணிகள், அம்மாநில அரசின் பெண்கள் நலத் திட்டத்தின் மூலம் பயனடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராய்பூரின் தொழிலாளர் ஆணையர் ஜிதின் குமார் கூறுகையில், இது மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடந்தது.
மேலும், நாங்கள் தரவு பதிவு சேவைகளை வெளியில் கொடுத்துச் செய்வத்தால், ஒருவருக்கு மட்டும் இதுபோன்ற தவறான தகவல் சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 732 வயதுடைய பெண் ?
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment