வடக்கு தேர்தல் நீதியானதல்ல என நிரூபித்தால் பதவியை துறப்பேன்: மஹிந்த சவால்
நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் வடமாகாண சபைக்கான தேர்தல், நடைபெறவில்லை என்று பொதுநலவாய அமையத்தின் அதிகாரிகள் நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகுவேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஜோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தேர்தல் திகதியை தீர்மானிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டுடன் வெளியாகும் அறிக்கையை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்தின் சுருக்கம் பின்வருமாறு,
1. ஜனாதிபதி தேர்தலில் ஒரு மில்லியன் வரையிலான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை நாம் எதிர்பார்க்கின்றோம்.
2. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி டிசெம்பர் 4ஆம் திகதி ஆகும்.
3. டிசெம்பர் 15 அளவில் தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும்.
4. தபால் மூல வாக்களிப்பு டிசெம்பர் 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறும்.
5. நாட்டை விட்டுச் சென்றவர்களும் இறந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் சுட்டிக்காட்டப்படுவர்.
6. அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களில் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டைகள் அடங்கும்.
7. தேர்தல்கள் செயலகம் மூலம் தற்காலிக தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
8. அடையாள அட்டை வழங்குதலை துரிதப்படுத்த நடமாடும் சேவைகள் நடத்தப்படும்.
9. ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம், ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தெற்காசிய தேர்தல் கண்காணிப்பாளர்களை எம்மால் அலட்சியப்படுத்த முடியாது.
10. வன்முறை தொடர்பாக தன்னால் பொலிஸாருக்கு பணிப்புரை மட்டுமே வழங்க முடியும். அதை தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது.
11. உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் வெளிநாட்டு தேர்தல்; கண்காணிப்பாளர்களையும் கொண்டுவரலாம் என்று நம்புகின்றோம்.
12. தேசிய முகாமைத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டுதான் தேர்தலுக்கான திகதிகளை நாம் தீர்மானிக்கின்றோம்.
13. வட மாகாண சபை தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் அல்லவென பொதுநலவாய அலுவலர்கள் கூறுவார்களாயின் நான் எனது பதவியை இராஜினாமா செய்வேன்.
14. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தியமைக்காக வடமாகாண சபை தேர்தலின் வெற்றியாளர்கள் எமக்கு நன்றி தெரிவித்தனர்.
15. தேர்தல் முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிப்பது எவ்வாறு என்பதையிட்டு நான் இதுவரை தீர்மானிக்கவில்லை.
16. பொதுநலவாய ஜனநாயகமும் எமது ஜனநாயகமும் வித்தியாசமானவை.
17. நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். நான் மக்களின் ஊழியன், அரசாங்கத்தின் ஊழியன் அல்ல.
18. சகல தேர்தல் ஆணையாளர்களும் ஜனாதிபதிகளினால் தான் நியமிக்கப்பட்டனர். இதனால், இலங்கையில் எந்தவொரு தேர்தலும் நியாயமாக நடைபெறவில்லை என்று கூறமுடியாது.
19. நாம் தேர்தலை தாமதப்படுத்தினால் அது பாப்பரசரின் விஜயத்துடன் செருகுப்படும்.
20. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தமது வாக்குகளை எவ்வாறு செலுத்தலாம் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். நாம்
நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டங்களையே செயற்படுத்துவோம். அவ்வளவுதான்.
21. மரபின்படி இந்த காலத்து பொலிஸ் இடமாற்றங்கள் என்னாலும் அங்கிகரிக்கப்பட வேண்டும்.
22. அரசியல் தேவை கருதி செயற்படவுள்ள பொலிஸ் இடமாற்றங்களை நாம் அனுமதிக்கமாட்டோம்.
வடக்கு தேர்தல் நீதியானதல்ல என நிரூபித்தால் பதவியை துறப்பேன்: மஹிந்த சவால்
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment