இரு கால்களையும் இழந்த போராளிக்கு வழங்கிய உதவி தொடர்பில் இராணுவம் துருவித்துருவி விசாரணை: வைத்திய கலாநிதி சிவமோகன் சீற்றம்
இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு தாம் வழங்கிய உதவிகள் தொடர்பில் அவரிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு கால்களையும் இழந்த நிலையில் முல்லைத்தீவில் வசித்துவருகின்ற ஆர்.புஸ்பறஜீவன் என்ற முன்னாள் போராளிக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான அரிசியை வழங்கியிருந்தோம்.
இவ்வாறு வறிய நிலையில் வாழ்ந்துவருகின்ற பல குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தோம் ஆனால் அத்திட்டத்தையும் தடுத்து வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட வலுவிழந்த நிலையில் வசிக்கின்றவர்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இங்கிருந்த காலப்பகுதியில் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன. அதனையும் அரசாங்கம் தடுத்துள்ளது.
இந்த நிலையில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது உறவுகளுக்கு வழங்குகின்ற உதவிகளையும் தடுத்து வருகின்றனர்.
இருகால்களையும் இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி தொடர்பில் விசாரித்துள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை ஒளியேற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது என்றார்.
இரு கால்களையும் இழந்த போராளிக்கு வழங்கிய உதவி தொடர்பில் இராணுவம் துருவித்துருவி விசாரணை: வைத்திய கலாநிதி சிவமோகன் சீற்றம்
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:


No comments:
Post a Comment