பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைது
சந்தேகநபர் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய, அகலிய பொலிஸ் காலரணின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 24 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பத்தேகம, திவிதுர பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே பொலிஸ் பொறுப்பிலிருந்து காணாமல்போயுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காணாமல்போன நபரின் உறவினர்கள் பொலிஸ் நிவாரண பிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைது
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:

No comments:
Post a Comment