தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
தமிழக மீனவர்கள் ஐவருக்கு இலங்கையின் உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழக மாநிலம் முழுவதும் மீனவர்கள் காலவரையறை அற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மாநிலத்தின் 13 கரையோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களும், இலங்கை மீனவர்கள் மூவரும் 2011 ஆம் ஆண்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், இலங்கை கடற்பரப்பினுள் போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் பிரதிவாகளான 8 மீனவர்களுக்கும் உயர்நீதிமன்றம் கடந்த வாரத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை கண்டித்து, தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களையும், அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களையும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தின் 13 கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 2000 இற்றும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:

No comments:
Post a Comment