8 புதிய கோள்கள் கண்டு பிடிப்பு: இரு கோள்கள் பூமியை ஒத்தவை
எமது சூரிய மண்டலத்துக்கு வெளியிலுள்ள 8 புதிய கோள்கள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த 8 கோள்களும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் எமது சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் மொத்த எண்ணிக்கை 1,000த்தையும் கடந்துள்ளது.
இந்தக்கோள்களில் இரு கோள்களானது தமது நட்சத்திரத்திலிருந்து உயிர்வாழ்க்கைக்கு சாத்தியமான வலயத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமியை விடவும் இரு மடங்கிலும் குறைந்த விட்டமுடைய சிறிய கோள்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அந்தக் கோள்களின் கெப்லர் 438 பி மற்றும் கெப்லர் 442 பி ஆகிய இரு கோள்களும் இது வரையில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே பூமியை ஒத்த
தன்மையை அதிகளவில் கொண்டுள்ளன. அவை எமது சூரியனை விடவும் குளிர்மையானதும் சிறியதுமான சிவப்பு குள்ள நட்சத்திரங்களை வலம் வருகின்றன.
8 புதிய கோள்கள் கண்டு பிடிப்பு: இரு கோள்கள் பூமியை ஒத்தவை
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:


No comments:
Post a Comment