
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழுவில் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்ள இந்த மூன்று பேரும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த மூன்று சாதனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பு வாய்ந்தது என்றும், அவர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் இந்தக் குழுவில் இடம் பெறாதது குறித்து எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment