
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான பல முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என அவர் கூறியுள்ளார்.
மேலும் ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியதும் கோத்தபாய ராஜபக்ச தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என தான், அன்று நிறைவேற்று சபையில் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment