அகதிகளை ஆதரிக்கும் ஆட்சிதேவதை ஏஞ்சலா மெர்கல்....
ஏஞ்சல் என்றாலே ’தேவதை’ இவர் அழகு தேவதை என்பதை விட, அகதிகளை காக்கும் ஆட்சி தேவதையாக உலகமே போற்றுகிறது.
அகதிகளை அரவணைக்கும் அன்பு உள்ளம் கொண்ட ஏஞ்சலா டோராதியா மெர்கல், உலகில் மனிதமும் அமைதியும் ஒரு ஆட்சியில் எழுச்சிபெறுவதற்கு முன்னுதாரணமானவர் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் மனமுவந்து பாராட்டினார்.
இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, அதற்கு முன்னால் அறிவியல் ஆராய்ச்சியாளர், 2005 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஜெர்மன் அதிபர், கிறிஸ்தவர் ஜனநாயக ஒன்றிய(CDU) கட்சியின் தலைவராக 2000 ம் ஆண்டு முதலாக இருக்கிறார்.
தற்போது, 61 வயது நிறைவடைந்திருக்கும் அவர், 1954 ம் ஆண்டில் ஜூலை 17 ல், முன்பு மேற்கு ஜெர்மனியாக இருந்த ஹம்பர்க்கில் பிறந்தார்.
இவருடைய பெற்றொர்கள் ஹோர்ஸ்ட் காஸ்னர், ஹெர்லிண்ட் காஸ்னர்.
மெர்கல் இயற்பியல் வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1998 முதல் ஜோச்சிம் சாயரை திருமணம் செய்துகொண்டு வாழும் இவர். அதற்கு முன் உல்ரிச் மெர்கல் என்பவருடன் (1977 முதல் 1982 வரை) தனது முதல் திருமண வாழ்க்கையை நடத்தினார்.
Go to Videos
Pettagam - Angela Merkel
ஜெர்மனில் 1989 ல் நடந்த புரட்சிகளை அடுத்து, ஜனநாயக முறையில் 1990 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு ஜெர்மன் அரசில் துணை செய்தி தொடர்பாளராக தனது அரசியல் வாழ்வை தொடங்கினார்.
பிறகு, அதிபர் ஹெல்முட் கோகி ஆட்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுற்றுச்சூழல் அமைச்சராகவும் 1994 ல் மாற்றப்பட்டார்.
1998 ல் கோகி தோற்ற பிறகு, சி.டி.யூ.வின் பொதுச்செயலாளராக முதல் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்தே அவர் வாழ்க்கை உச்சம் பெற்றது.
2005 ல் நடந்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பெரும் கூட்டணி முனையிலும் முதல் பெண் ஜெர்மன் அதிபராக நவம்பர் 22 ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 ல் ஐரோப்பிய கவுன்சில் மற்றும் G8 அமைப்புக்கு இரண்டாவது பெண் தலைவராக இருந்து, லிஸ்பன் உடன்படிக்கை மற்றும் பெர்லின் பிரகடன பேச்சில் மத்திய பங்கு வகித்தார்.
அதே ஆண்டின் ஏப்ரல் 30 ல் அட்லாண்டிக் பொருளாதார கவுன்சில் ஒப்பந்தம் மெர்கலை மையப்படுத்தியே கையெழுத்திடப்பட்டது. அது ஐரோப்பிய மற்றும் சர்வதேச அளவில் நிதிநெருக்கடியை நிர்வகித்தது.
தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குவது. வாரத்தில் பணி நேரத்தை அதிகப்படுத்தும் காரணங்களுக்கு எதிரான மாற்றங்களை கொண்டுவந்தார். .
மேலும், நிறுவனங்களின் வணிகம் குறைவானால் தொழிலாளர்களின் செலவுகளை எளிதாக கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே உள்ள சட்டங்கள் நாட்டில் போட்டிநிலை குறைவதற்கு சதகமாகவே உள்ளதை அறிவுறுத்தினார்.
ஜெர்மனில் பல சமூக கலாச்சார உருவாக்கம் பற்றி, போட்ஸ்டாமில் நடந்த அடிப்படைவாத கறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் இளைஞர்கள் கூட்டத்தில் அக்டோபர் 2010 ல் பேசினார்.
உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் (2012 முதல் 2015 வரை) தேர்வு செய்யப்பட்டார். உலகின் மிகச்சிறந்த மனிதராக 2015 டிசம்பரில் ’டைம்’ பத்திரிகையிலும் தேர்வுசெய்யப்பட்டார்..
ஃபோர்ப்ஸ் பத்திரிகை 9 வது முறையாக உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக மே 2015 ல் தேர்வுசெய்தது.
”அரசியலுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கு பணம் சேர்ப்பது முதன்மையான நோக்கமாக இருக்கவே கூடாது.” இது அவரது செறிவான சிந்தனை.
ஹிட்லர் ஆட்சியில் மனிதத்தில் ஜெர்மன் எவ்வளவு தழ்ந்ததோ, நேர்மாறாக, மெர்கல் ஆட்சியில் அதே ஜெர்மன் மனிதத்தில் உயர்ந்து நிற்கிறது.
அகதிகளை ஆதரிக்கும் ஆட்சிதேவதை ஏஞ்சலா மெர்கல்....
Reviewed by Author
on
May 22, 2016
Rating:

No comments:
Post a Comment