86 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: புதிய வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணி!
இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளின் ஒரு பிரிவான ஹாக்கியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஒரே போட்டியில் இந்தியா 26 கோல்கள் அடித்துள்ளதன் மூலம் 86 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
அதாவது, கடந்த 1932ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், தயான்சந்த் தலைமையிலான இந்திய அணி, 24 கோல்களை அமெரிக்காவுக்கு எதிராக அடித்திருந்தது. இதுவே இதுநாள் வரை சாதனையாக இருந்து வந்தது.
தற்போது நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் இந்திய அணி மொத்தம் 43 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
86 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: புதிய வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணி!
Reviewed by Author
on
August 25, 2018
Rating:
No comments:
Post a Comment