வடமாகாண ரீதியில் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதல் இடம்
2025 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாணத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டு திருவிழாவானது கடந்த16.08.2025 தொடக்கம்20.08.2025 அன்று வரை சிறப்பாக இடம்பெற்று உள்ளது
குறித்த தடகளப் போட்டியில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியானது
ஐந்து தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் நான்கு வெண்கல பதக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது
அத்தோடு 2025 ஆம் ஆண்டிற்கான மாகாண தடகளப்போட்டியிலே 14 வயதுக்கு உட்பட்ட அஞ்சலோட்ட அணி புதிய சாதனையை படைத்துள்ளது
அத்துடன் குறித்த தடகள போட்டியில் 102 புள்ளிகள் பெற்று மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதல் இடத்தையும் பெற்று கொண்டுள்ளமை குறிப்பிட தக்கதாகும்

No comments:
Post a Comment