எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக சபையில் கூட்டமைப்பு போர்க்கொடி!
சிறுபான்மையின மக்களின் ஜனநாயகப் பலத்தை உடைத்தெறியும் வகையில் எல்லை நிர்ணய அறிக்கை அமைந்துள்ளதால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று அறிக்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்புக்காக அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன. இதன்படி, சிறுபான்மையினக் கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்தன. எனினும், அவை நிராகரிக்கப்பட்டே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மூலம் வடக்கிலும், வடக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களினதும், முஸ்லிம்களினதும், மலையகத் தமிழர்களினதும் ஜனநாயக நலன்கள் பாதுகாக்கப்படவில்லை. தேசிய கட்சிகளைச் சார்ந்து வாக்களிக்க வேண்டிய நிலைக்கு எம்மக்கள் தள்ளப்படும் நிலை காணப்படுகின்றது.
எனவே, இந்த அறிக்கையை நாம் ஆதரிக்கும் பட்சத்தில் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம் முதல் உள்ளூராட்சி சபை வரை பறிபோகும். எனவே, அனைத்துத் தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக சபையில் கூட்டமைப்பு போர்க்கொடி!
Reviewed by Author
on
August 25, 2018
Rating:

No comments:
Post a Comment