மன்னாரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா.....
மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இனையம் நடாத்தும் நாவலர்.விழா இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி தேச கீர்த்தி மஹா தர்மகுமாரக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.
நிகழ்வுகள் இம்மாதம் 15.12.2018 அடம்பன் மகா வித்தியாலயத்தில் காலை 09.மணி முதல் ஆரம்பமாகி நடைபெறும்.
பிரதம விருந்தினராக
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு செ.கேதீஷ்வரன் அவர்களும்
சிறப்பு விருந்தினராக
மன்னார் மாவட்ட இந்து மஹா சபை தலைவர் திரு.செ.சி.இராமகிருஷ்ணன் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் மு.கதிர்காமநாதன் மாவட்ட கலாசார உத்தியோகதர் திரு நித்தியானந்தன்
ஆங்கில வளநிலைய முகாமையாளர் திரு.ச. சன்முகலிங்கம் அவர்களு ம்
பதிவாளர் திரு கு. பவானந்தன் மாந்தை மேற்கு
இலுப்பக்கடவை அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதிரு லசந்த அவர்களும்
கெளரவ விருந்தினராக
மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் தலைவர் திரு ம.கனகலிங்கம் மோகன் அவர்களும்
மாந்தை மேற்கு சர்வமத பேரவையின் செயலாளர் திரு என். தங்கராசா அவர்களும்
இத்திக்கண்டல் சித்தி விநாயர் ஆலய தலைவர் திரு கே.வெள்ளையன் சமூக ஆர்வலர் திரு என்..உருத்திரமூர்த்தி கலந்து சிறப்பிக்க உள்ளனர் .
விசேட உரை நிகழ்த்த யாழ் பல்கலைக்கழக மன வளக் கலை துனைப்பேராசிரியர் திரு பிரனவன் கலந்து சிறப்பிக்க உள்ளார்
மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் கதாப்பிரசங்கம் சொல்லாடு களம் நடனம். போன்ற நிகழ்வுகளும் நாவலர் விருது வழங்கல் இறை பணியாளர் விருது வழங்கல் நிகழ்வுகளும் மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடாவருடம் நடக்கும் கெளரவிப்பில் இம்முறையும் அறநெறி ஆசிரியர்கள் 05 பேர் கெளரவிக்கப்படவும் உள்ளனர்.
மன்னாரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா.....
Reviewed by Author
on
December 12, 2018
Rating:

No comments:
Post a Comment